‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ இளைஞர்... ‘தேடிப்பிடித்த’ போலீசாருக்கு ‘அடுத்தடுத்து’ காத்திருந்த அதிர்ச்சி... ‘பரபரப்பு’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 26, 2020 08:44 PM

மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளைஞர் மைனர் சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Madurai Youth Escapes From Corona Camp Marries Minor Girl

கடந்த மார்ச் 23ஆம் தேதி துபாயில் இருந்து சிவகங்கையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் மதுரை திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென அவர் காணாமல் போக, மதுரை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வந்துள்ளனர். இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் சிவகங்கை அருகே நேற்று மதியம் ஒரு பெண்ணுடன் வைத்து அவரைப் பிடித்துள்ளனர்.

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காதலித்த பெண்ணுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததும், அதை அறிந்த அவர் அந்தப் பெண்ணைத் தனியாக அழைத்துச் சென்று திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை கொரோனா கண்காணிப்பு முகாமில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் அந்த சிறுமியையும் அவருடைய வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

Tags : #CORONAVIRUS #CRIME #MADURAI #POLICE #MARRIAGE #CAMP #MINOR #YOUTH #LOVE