“டிரம்ப் பதிவை நீக்காம இருப்பதற்கு இதுதான் காரணம்!” - ஸக்கர்பர்க் அளித்த விளக்கம்!.. திருப்தியடையாமல் கொந்தளிக்கும் பேஸ்புக் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் ஃபேஸ்புக் பதிவு இன்னும் நீக்கப்படாமல் இருப்பது வெட்கக் கேடானது என்று அந்நிறுவன ஊழியர்கள் சிலர் கூறியுள்ளனர்.

காவல்துறையின் பிடியில் இருந்தபோது கருப்பின அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்டு உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவில் பெரிதாக வெடித்துள்ள நிலையில் இந்த போராட்டம் குறித்து ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கருத்து பதிவிட்டிருந்தார் டோனால்ட் டிரம்ப். அதில், ‘போராட்டங்களின்போது சூறையாடல் தொடங்கினால் சுட்டுக் கொல்லப்படுவதும் தொடங்கும்’ என்றும் பதிவிட்டிருந்தார்.
இதனை அடுத்து, வன்முறையை தூண்டும் விதத்தில் இந்த பதிவு உள்ளதாக எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு ட்விட்டர் அந்த பதிவை மறைத்தது. ஆனால் அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை. எனினும் ட்ரம்பின் பதிவில் உள்ள கருத்துக்கள் அரசுமுறை அறிவிப்பாகவே இருந்ததாகவும், அது தங்கள் நிறுவனத்தின் சமூக ஒழுங்கு விதிமுறைகளை மீறவில்லை என்றும், அதனால் அப்பதிவு இன்னும் நீக்கப்படாமல் இருப்பதாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஸக்கர்பர்க்கின் இந்த பதிலால் திருப்தி அடையாத ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிலர், டிரம்பின் அந்த பதிவு இன்னும் ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கம் செய்யப்படாமல் இருப்பது வெட்கக் கேடானது என்று கொந்தளித்து, ஸக்கர்பர்க்கின் நடவடிக்கையை விமர்சித்து, வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாகக் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்
