'மூணாவது காதலனை வச்சு...' 'ரெண்டாவது காதலனுக்கு ஸ்கெட்ச்...' அப்போ முதல் கணவன்...? தாறுமாறான காதல் களியாட்டம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 12, 2020 11:12 AM

வேலூர் அருகே திருமணம் ஆன பெண் ஒருவர், தான் காதலித்து வந்த இரண்டாவது காதலனை மூன்றாவது காதலன் கொண்டு கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

A woman murdered her second boyfriend with a third lover

சில நாட்களுக்கு முன் வேலூர் அருகே இருக்கும் பாலாற்றங்கரையில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரது சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மோப்ப நாய்களை கொண்டு ஆய்வு நடத்தினர். மோப்ப நாய்களோ சிறிது தூரம் சென்று ஒரு வீட்டின் வெளியே நின்றுள்ளது.

தரை முழுவதும் ரத்த கரையோடு காணப்பட்ட அந்த வீடு கோகிலா என்பவரது வீடு என தெரியப்பட்ட பின் அவரை தேடும் பணிகள் முடக்கிவிடப்பட்டது. பின் கோகிலாவிடம் நீண்ட நேரம் பேசிய ஆற்காடு பகுதியை சேர்ந்த ஆம்புலன்சு ஓட்டுனர் மணிகண்டனை பிடித்து விசாரித்த போது கொலை செய்யப்பட்டவர் ரவுடி சுனில் என்பதும் காதல் வைரஸ் கோகிலாவால் கொலையானதும் தெரியவந்தது.

அவர்களுடனான தொடர்பை ஆராயும் போது தான் பல காதல் கதைகள் வெளிவந்தன.

கோகிலா மன்னார்குடியை சேர்ந்த இப்ராஹிமும் காதல் தம்பதிகள். 2 குழந்தைகள் உடைய இவர்கள் பிழைப்பிற்காக விருதம்பட்டு வந்து குடியேறியுள்ளனர். இவர்களுடன் இப்ராஹிம் நண்பர்ஆம்புலன்சு ஓட்டுனர் மணிகண்டனும் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கோகிலா தன் கணவருக்கு தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் சுனில் என்னும் ரவுடியை காதலித்து வந்துள்ளார். இது தெரிந்த இப்ராஹிம் கோகிலாவை கண்டித்துள்ளார். ஆனால் தனது காதல் கதையை நிறுத்தாத கோகிலா சுனிலிடம் இது பற்றி கூறியுள்ளார். தனது காதலியை தொந்தரவு செய்த இப்ராஹிமை வீட்டிற்கே வந்து அடித்துள்ளார். இதையடுத்து அவமானம் தாங்க முடியாமல் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வேறொரு பகுதிக்கு சென்றுள்ளார் இப்ராஹிம்.

அதையடுத்து சுமார் 8 வருடம் காதலித்து வந்த சுனிலை கழட்டி விட்டு, அவருக்கு தெரியாமல் இப்ராஹிமின் நண்பரான மணிகண்டனை காதலிக்க தொடங்கினார் கோகிலா. இதையறிந்த ரவுடி சுனில், போதையில் கோகிலாவை அடித்து உதைத்துள்ளான்.

ஆத்திரமடைந்த கோகிலா சுனிலை தீர்த்துக்கட்ட தனது சமீபத்திய காதலனான ஆம்புலன்சு ஓட்டுனர் மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளி சதீஷ்குமார், ஆகியோருடன் கோகிலாவும் அவரது குடிகார தந்தையும் சேர்ந்து போதையில் வீட்டிற்கு வந்த சுனிலை அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

தற்போது போலீசார் தலைமறைவான கோகிலாவையும், அவரது தந்தையையும் டி.எஸ்.பி.துரைப்பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த காதல் களியாட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags : #LOVE