முதலை 'கண்ணீர்' நீண்ட நாள் பலிக்காது... பிரபல வீரருடன் 'ஆடையின்றி' எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிரபல இந்திய வீரருடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை மனைவி சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர் முஹம்மது ஷமி. மனைவி ஹசின் ஜகானும், ஷமியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இவர்களுக்கு இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தற்போது ஹசின் ஜகான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பியுள்ளார். மேலும் அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் பழைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவற்றை நெட்டிசன்கள் விமர்சனம் செய்தாலும் அவர் அதை கண்டுகொள்வது இல்லை. அந்த வகையில் முஹம்மது ஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதுகுறித்து அவர், ''நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராக இருந்தேன். தற்போது நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் பலர் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
