'ரோடு க்ளோஸ் பண்ணா என்ன' ... 'இதெல்லாம் எங்கள ஒண்ணும் பண்ணாது' ... எல்லைகள் கடந்து ஈர்த்த முதுமைக் காதல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Mar 31, 2020 07:36 PM

ஜெர்மனியை சேர்ந்த 89 வயதான கார்ஸ்டென் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த 85 வயதான இங்கா ரஸ்முசென் ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி சந்தித்து வருகின்றனர். முதுமை வயதிலும் தங்களது காதலை வெளிப்படுத்தி இருவரும் தங்களது நேரத்தை கழித்து வந்தனர்.

Old couple meets daily amid outbreak in Germany and Denmark

இந்நிலையில், சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. ஜெர்மனியில் 63,000 பேருக்கும், டென்மார்க்கில் 2,500 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் ஜெர்மனி மற்றும் டென்மார்க் பகுதி எல்லைகள் மூடப்பட்டது.

இரண்டு வருடங்களாக நாள்தோறும் சந்தித்து வரும் கார்ஸ்டென் மற்றும் இங்கா ராஸ்முசனின் காதல் சந்திப்பை இந்த முடிவுகள் ஒன்றும் பாதிக்கவில்லை. கல்லெஹுஸ் பகுதியிலுள்ள அடைக்கப்பட்ட எல்லையில் இருவரும் இரு பக்கம் அமர்ந்து கொண்டு தங்களது பொழுதைக் கழித்து வருகின்றனர். எல்லைகள் மூடப்பட்டது வருத்தமளித்தாலும் நாங்கள் மாறப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பயணம் மேற்கொண்டு வரும் இவர்கள் நிலைமை சீரான பின் மீண்டும் ஒரு முறை பயணம் மேற்கொள்ள வேண்டும் என இருவரும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #LOVE #LOCKDOWN #OUTBREAK