'லவ் பண்ணுங்க சார், லைப் நல்லா இருக்கும்' ... 'QUARANTINE' சமயத்தில் மாடி விட்டு மாடி பறந்த காதல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Mar 29, 2020 07:47 PM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் போது தனிமைப்படுத்தப்பட்ட இருவர் மாடி விட்டு மாடி டேட்டிங்கில் ஈடுபட்ட சம்பவம் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Love story in America during the quarantine times

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகிலுள்ள பல்வேறு நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அனைவரும் வீட்டினுள் முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் சிறிது தூரத்தை கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் டோரி என்ற இளம்பெண், தனிமையில் இருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார். இதனைத் தனது வீட்டின் மாடியிலிருந்து கண்டு ரசித்த ஜெர்மி என்ற இளைஞர் ஒருவர் தனது போன் நம்பரை ட்ரோன் கேமரா மீது எழுதி அந்த பெண் உள்ள திசை நோக்கி பறக்க விட்டுள்ளார். நம்பர் கிடைத்த ஒரு மணி நேரத்தில் டோரியும் ஜெர்மிக்கு மெசேஜ் செய்துள்ளார். இருவரும் தொலைபேசி வழியே உரையாட ஆரம்பிக்க ஜெர்மி டோரியை டின்னருக்கு அழைத்துள்ளார்.

'Quarantine' சமயத்தில் எப்படி ஒன்றாக இருவரும் டேட்டிங் செல்ல முடியும் என டோரி யோசித்த நிலையில், இருவரும் தனி தனியாக தங்களது வீட்டு மாடிகளில் மேஜை ஒன்று தயார் செய்து டின்னர் சாப்பிடலாம் என ஜெர்மி ஆலசோனை தெரிவித்துள்ளார். அதன்படி இருவரும் தங்கள் வீட்டு மாடிகளில் மேஜை மற்றும் உணவு தயார் செய்து வீடியோ கால் மூலம் டேட்டிங் செய்து காதலில் விழுந்துள்ளனர்.

தனிமையில் இருக்கையில் அருகருகே சந்தித்து கொள்ளாமல் இருவர் காதலில் விழுந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #QUARANTINE #AMERICA #LOVE