'கல்யாணத்துக்கு அப்புறம் கூட அப்பா அம்மா ஏத்துக்கல!'... கலங்கிய இளம் தம்பதி!.. தனித்தனி அறையில்... மனதை உலுக்கும் கோரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலையில் திருமணமான ஒன்றரை மாதத்தில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார். இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த விஜயா (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
விஜயா ஆசிரியர் பயிற்சி பெற்றவர். இவர்களின் காதல் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. விஜயாவின் பெற்றோர் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ஜெயக்குமார் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு விஜயாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கோட்டக்கல் கிராமத்திற்கு வந்து இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். விஜயா வீட்டில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனித்தனி அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
