'22 வயது' இளைஞருடன் 'தாயாருக்கு காதல்...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'இன்ஸ்டாகிராம் புகைப்படம்...' 'சம்மதம் தெரிவித்த' கால்பந்து வீரர் 'நெய்மர்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 15, 2020 06:40 PM

கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர், தனது தாயார் 22 வயது வாலிபருடன் கொண்டுள்ள காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

Be happy mom Neymar gives his approval to his 52 year mom

பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் நெய்மர். இவரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே மற்றும் தாயார் நடின் கான்கேல்வ்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக் கொண்டனர். தந்தை வாக்னர் ரிபெய்ரே நெய்மரின் மேனேஜராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நெய்மரின் தாயார் நடினுக்கும், நெய்மரின் தீவிர ரசிகரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. டியாகோ ரமோஸ் என்ற அவருடன் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அவர்களின் நட்பு காதலாக மாறியதாகத் தெரிகிறது.

இந்நிலையல், இருவரும் அரவணைத்து நிற்பது போன்ற படத்தை நெய்மரின் தாயார் நடின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நெய்மர் ஏதும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் அந்த படத்திற்கு‘‘மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’’என்று கருத்து தெரிவித்துள்ளார்.