ஸ்ருதிஹாசன் மீது தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார்!.. வலுக்கும் மோதல்... குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி போர்க்கொடி!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனின் மகளும் , நடிகையுமான ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச்சவாடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி உடன் நிறைவுப் பெற்றது.
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் வாக்குசாவடிகளை பார்வையிட சென்ற போது அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் உடன் சென்று இருந்தார்.
வாக்குசாவடிகளுக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து பிறர் செல்ல கூடாது என்ற நிலையில், வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்த போது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தது விதிமீறல் என்பதால் அவர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க தலைமை ஏஜென்ட் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும் போது தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ருதிஹாசன் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் விதிமுறை மீறல் படி ஸ்ருதிஹாசன் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரிளித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
