'அடுத்தடுத்து பழுதான 100க்கும் மேற்பட்ட பைக்குகள்!'.. கலப்பட பெட்ரோல் போட்ட பங்க்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 09, 2019 11:07 PM

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 100க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் நடுவழியில் நின்றதால், கலப்பட பெட்ரோல் விற்கப்படுவதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

more than 100 bikes repaired due to mixed petrol vellore

நெல்லூர்பேட்டையிலிருந்து பேரணாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் 300க்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பாதிக்கும் பாதி பேரின் வாகனங்கள் நடுவழியில் நின்றுள்ளன. சிலரின் பைக்குகளை சோதித்த மெக்கானிக்குகள், கலப்பட பெட்ரோல்தான் பைக்குகள் நின்றுபோனதற்குக் காரணம் என்று கூறியதால் அதிர்ந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்கினை முற்றுகையிட்டனர்.

அதன் பின்னர் அங்கு காவலர்கள் விரைந்து வந்து விசாரித்ததில், பெட்ரோல் இருப்பு வைத்திருந்த இடத்தில், டீசல் லாரி டீசலை இறக்கிவிட்டதாகவும், அதனால் பெட்ரோலில் டீசல் கலந்ததாகவும், அவ்வளவு பெட்ரோலையும் வீணாக்க முடியாது என்பதால் வாகன ஓட்டிகளுக்கு வழங்கியதாகவும் பெட்ரோல் பங்க் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் வாகன ஓட்டிகளின் பழுதுக்கு, தாங்களே பொறுப்பேற்று  அத்தனை பைக்குகளையும் பங்க் ஊழியர்களை வைத்து பழுது நீக்கம் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் வாகன ஓட்டிகளோ இந்த பங்க் எப்போதும் இப்படித்தான் கலப்பட பெட்ரோலை விற்பதாக குற்றம் சாட்ட, எந்தத் தொழிலாக இருந்தாலும் சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும் என்று பங்க் மேலாளர் கூறியுள்ளார்.

Tags : #PETROL #BIKE #VELLORE