‘ரூ.25 பைசாவுக்கு பிரியாணி பார்சல்’! ‘ஹோட்டலின் அசத்தல் ஆஃபர்’.. அலைமோதிய கூட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 02, 2019 07:15 PM

புதிதாக திறக்கப்பட்ட ஹோட்டல் ஒன்றில் ரூ.25 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vellore hotel gave 25 paise briyani to customers

வேலூரில் உள்ள ஆரணி சாலையோரம் ‘ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம்’ என்ற பெயரில் புதிதாக ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு அசத்தல் ஆஃபரை ஹோட்டல் நிர்வாகம் அறிவித்தது. அதில் ரூ.25 பைசா கொடுத்தால் பிரியாணி பார்சல் வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதனைப் பார்த்த மக்கள் கூட்டம் கூட்டமாக ரூ.25 பைசாவுடன் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

காலை 11 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பிரியாணி வழங்கப்படும் என்றும் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலில் வரும் 100 பேருக்கு பிரியாணி வழங்க நினைத்துள்ளனர். ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் 200 பேரிடம் ரூ.25 பைசாவை வாங்கிவிட்டு பிரியாணி பார்சலை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த கடையின் உரிமையாளர், ‘விளம்பரத்துக்காக ரூ.25 பைசா என அறிவித்தோமே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை. செல்லாக்காசாக இருந்தாலும் எங்களின் முதல் வருமானம் 25 பைசாதான்’ என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

Tags : #BRIYANI #VELLORE #HOTEL #CUSTOMERS #OFFER