செலவுக்கு பணம் தேவை... வீட்டின் முன்பு... இளம் பெண்கள் செய்த காரியம்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 03, 2020 08:54 AM

சென்னையில் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, இளம் பெண்கள் இருவர் திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai: Women Trying to Steal a 2 Wheeler Caught on Camera

சென்னை திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலை தாயர் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் யாசர் அராஃபத் (26). இவர் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியதும்,  தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு அருகே எப்போதும் நிறுத்துவது வழக்கம். அதேபோல் நேற்றிரவும் அதே இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு, தனது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் அருகே 2 இளம்பெண்கள் நிற்பது தெரிந்தது.

பின்னர் அந்த இளம்பெண்கள் இருவரும் கள்ளச் சாவிபோட்டு தனது வாகனத்தை திருட முயற்சி செய்வதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனே வீட்டுக்கு வெளியே சென்று அந்த இளம் பெண்களை பிடிக்க யாசர் அராஃபத் முயற்சி செய்துள்ளார். இதில் சுதாரித்துக் கொண்ட ஒரு இளம் பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொரு பெண்ணை யாசர் அராஃபத் பிடித்துக்கொண்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை சுற்றி வளைத்தனர்.

அதன்பிறகு அண்ணா சாலை போலீசாருக்கு தகவல் அளிக்க அங்கு வந்த போலீசாரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் மோனிஷா (20) என்பதும், தப்பி ஓடிய தோழியின் பெயர்  மோனிஷா (20) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டதால், மோனிஷாவை கைது செய்த போலீசார் தப்பியோடிய சந்தியாவை தேடி வருகின்றனர். போதைப்பழக்கத்துக்கு ஆளானதால், செலவுக்காக வாகனத்தை திருட முயற்சித்ததாக மோனிஷா கூறியதாக தெரிகிறது.

Tags : #TWOWHEELER #BIKE #CCTV