‘என்கிட்ட பேசமாட்டயா’!.. ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்’.. நொடியில் வக்கீலுக்கு நேர்ந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 03, 2020 01:33 PM

நிச்சயிக்கப்பட்ட பெண் பேசாததால் அவரை மிரட்டுவதற்காக வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசியபடியே தூக்கிட்ட வழக்கறிஞர் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry lawyer commits suicide live in Whatsapp video call

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28). இவர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். ஆனால் சில நாட்களாக மணப்பெண், சுரேஷிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு அப்பெண்ணுக்கு சுரேஷ் வாட்ஸ் அப் வீடியோ கால் செய்துள்ளார். பின்னர், என்னிடம் நீ பேசவில்லையென்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மின்விசிறியில் கயிற்றைக் கட்டி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலி கீழே விழுந்துள்ளது. இதனால் கழுத்தில் கயிறு இறுக்கி சுரேஷ் உயிருக்கு போராடியுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனே சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் சுரேஷின் அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் அறை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளது. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். ஆனால் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு சுரேஷ் சடலமாக தொங்கியுள்ளார்.

இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிச்சயிக்கப்பட்ட பெண் பேசாததால் விளையாட்டாக தூக்கு மாட்டிய வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #PUDUCHERRY #LAWYER #WOMAN