'நீர் வீழ்ச்சியில் சிக்கி'.. 'அடுத்தடுத்து உயிரிழந்த 11 யானைகள்'.. 'நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 09, 2019 12:37 PM

தாய்லாந்து நாட்டில், நீர் வீழ்ச்சியில் விழுந்த குட்டி யானையைக் காப்பாற்ற முயன்று, மேலும் 5 யானைகள் பரிதாபமாக உயிரிந்ததாக வெளியான சம்பவம் கடந்த வாரம் உலகையே உலுக்கியது. இதுதொடர்பான விசாரணை பின்னர் நடந்தது.

11 elephant dead in Thailand falls, heartbreaking update

3 வயது யானை ஒன்று முதலில் ஹயூ நரோக் என்கிற நீர்வீழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை முதலில் விழுந்ததை அடுத்து மேலும் 5 யானைகள், குட்டி யானையைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்திருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது.

ஆனால் யானைகள் மரணம் தொடர்பான விசாரணைக்காக நீர் வீழ்ச்சி பகுதியில் பறந்த ட்ரோனை வைத்து சோதனை செய்து பார்த்ததில் உயிரிழந்த குட்டி யானை, காப்பாற்றப் போன 5 யானைகளையும் தாண்டி, மேலும் 5 யானைகள் நீர்வீழ்ச்சிக்குக் கீழே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தி உலகையே மீண்டும் அதிரவைத்துள்ளது.

இதுபற்றி பேசிய பூங்காவின் இயக்குநர், கடந்த சனிக்கிழமை யானைகளின் பிளிறல் சத்தம் நெஞ்சை பிழிந்ததாகவும், சென்று பார்ப்பதற்குள் எல்லாமே நொடியில் முடிந்ததாகவும் வருந்தியுள்ளார். இந்த சோகத்தில், பாறைகளின் பக்கம் வலிமையின்றி ஒட்டிக்கிடந்த மேலும் 2 யானைகளுக்கு உணவு வீசப்பட்டு அவை காப்பாற்றப்பட்டன.

27 ஆண்டுகளுக்கு முன்னர் 8 யானைகள் இதே பூங்காவில் இப்படி உயிரிழந்துள்ளன என்பதும் தற்போது இங்கு சுமார் 300 யானைகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #ELEPHANT #THAILAND #SAD