‘முதிய தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்’...‘ஓராண்டுக்குப் பின்’... 'வசமாக சிக்கிய இளம் தம்பதி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 05, 2019 09:02 PM

சென்னையில், முதிய தம்பதியை கொன்று கொள்ளையடித்து சென்ற  வழக்கில் ஓராண்டுக்குப் பின்னர், இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

AP young couple arrested for avadi old couple murder case

சென்னை ஆவடியை சேர்ந்தவர்கள் முதிய தம்பதியான ஜெகதீசன் மற்றும் விலாசினி. அரசு அச்சுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களான இவர்கள், தனியாக பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி, அவர்களது வீட்டில் உள்ள அறையில் இருவரும், கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும், 20 சவரன் நகை மற்றும் 40 லட்ச ரூபாய் பணம், முதிய தம்பதியின் வீட்டில் கொள்ளைப்போயிருந்தது.

இதையடுத்து நடந்த விசாரணையில், அவர்கள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த, ஆந்திராவை சேர்ந்த இளம் தம்பதி சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் தங்களது மகனுடன் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. அவர்கள், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து, தப்பி செல்லும் காட்சி வெளியாகி இருந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காவல்நிலையத்தில், சுரேஷ்குமார் மீது 38-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்தான் இந்த கொடூரமான கொலை சம்பவம் நடந்திருந்தது. அதன்பின்னர் தனிப்படை அமைத்து போலீசார், இளம்தம்பதியை தேடிவந்தனர். கடந்த 12 மாதங்களாக தம்பதியைத் தேடி வந்தநிலையில், ஹரித்துவாரில் தற்போது இருவரையும் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடைப்பெற்று வருவதாகப் போலீசார் கூறியுள்ளனர்.

Tags : #MURDERCASE #CHENNAI #AVADI