VIDEO: பியூட்டி பார்லரில்.. ஜன்னலை உடைத்துக்கொண்டு குதித்த மான்.. காயங்களுடன் தப்பிய பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Oct 08, 2019 09:05 PM

கடந்த சனிக்கிழமை மதியம் நியூயார்க்கில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் மான் ஒன்று திடீரென ஜன்னலை உடைத்துக்கொண்டு குதித்தது. இதில் பியூட்டி பார்லர் சோபாவில் காத்திருந்த பெண் ஒருவர் காயமடைந்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

deer crashing through hair salon window in New York

அதில் அந்த பெண் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார். அவருக்குப்பின்னால் இருக்கும் ஜன்னலில் இருந்து திடீரென கொம்பு வைத்த மான் ஒன்று குதித்து அவரை இடித்துத்தள்ளி பியூட்டி பார்லர் உள்ளே ஓடுகிறது. இதனால் அங்கிருக்கும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் பதறியடித்து ஓடுகின்றனர்.

தொடர்ந்து தான் உடைத்து உள்ளே வந்த ஜன்னல் வழியாகவே அந்த மான் தப்பித்து வெளியில் ஓடுகிறது. இதற்குப்பின் தான்  அங்கிருக்கும் ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். 

Video Credit: Eyewitness News ABC7NY

Tags : #AMERICA #VIDEO