‘இப்படியா பர்த்டேக்கு விஷ் பண்றது?..’ ‘ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய பிரபல இந்திய வீரர்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Oct 08, 2019 05:05 PM

ட்விட்டரில் ஜாகீர்கானின் பிறந்த நாளுக்கு கிண்டலாக வாழ்த்து சொன்ன ஹர்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Fans slam Hardik Pandya for his birthday tweet to Zaheer Khan

இந்திய அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜாகீர்கான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகள் மற்றும் டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜாகீர்கானுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யாவும் ட்விட்டரில் ஜாகீர் கானுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் ஜாகீர்கான் பந்துவீச்சில் தான் சிக்ஸர் அடித்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ள அவர், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாகீர்கான். இந்த ஷாட்டைப் போல அதிரடியாக கொண்டாடுங்கள்” எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். அத்துடன் ஜாகீர்கான் சிக்ஸர் அடிக்கும் வீடியோவையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

Tags : #HARDIKPANDYA #ZAHEERKHAN #BIRTHDAY #TWEET #FANS #SLAM #VIDEO #SIX