'மாமா உங்க பொண்ண என்கூட அனுப்ப மாட்டீங்களா'...'மருமகனின் வெறி செயல்'... கதிகலங்கிய குடும்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 16, 2020 11:28 AM

பிரிந்து சென்ற மனைவியைச் சேர்த்து வைக்க மறுத்ததால், மாமனாருக்கு நேர்ந்த கொடூரம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Chennai : Son in Law Bite and spitting his uncle\'s finger

கல்பாக்கத்தை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில்,  பொன்னன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். ஒரு கட்டத்தில் குடும்பத்தைக் கூட கவனிக்காமல் குடிக்குப் பொன்னன் அடிமையானதால், வெறுப்படைந்த கற்பகம், கல்பாக்கம் அடுத்த தென்பட்டினம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

மனைவி தாய் வீட்டிற்குப் போனதால் சோகமடைந்த பொன்னன் கடந்த வியாழக்கிழமை இரவு தென்பட்டினத்திற்கு வந்து மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி கற்பகம், கணவருடன் போகமாட்டேன் என மறுத்து விட்டார். இந்தநிலையில் நீ என்னுடன் வர வேண்டும் என்ப பொன்னன் தகராறு செய்ய, அப்போது கற்பகத்தின் தந்தை முருகேசன் குறுக்கிட்டு நீ ஒழுங்காக குடும்பம் நடத்தாததால் தானே, அவள் உன்னுடன் வர மறுக்கிறாள் எனக் கூறி, கற்பகத்தை அனுப்ப மறுத்து விட்டார்.

இதனால் கோபமடைந்த பொன்னன், ''மாமா அவள் எனது மனைவி, அவளை அழைத்து செல்லாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்'' என தகராறு செய்துள்ளார். இந்தச்சூழ்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில், ஆவேசமடைந்த பொன்னன், மாமனார் என்றும் பாராமல், அவரின் இடது கை ஆள்காட்டி விரலைக் கடித்துத் துப்பினார். இதனைச் சற்றும் எதிர்பாராத உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இந்நிலையில் வலி தாங்க முடியாமல் துடித்த  முருகேசனை அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்துக் கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மனைவியை அனுப்ப மறுத்த மாமனாரின் கை விரலை மருமகனே கடித்துத் துப்பிய சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #SON IN LAW #FINGER #BITE