‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 29, 2019 08:33 AM

தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Rains Holiday Declared For Schools In 4 Districts

தொடர் கனமழை காரணமாக அரியலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (29-11-2019) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலான மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Tags : #HEAVYRAIN #HOLIDAY #SCHOOL #DISTRICTS #TN