'நீ கவலை படாத பா'...'நான் வளர்ந்து அவனுங்கள'...'சீரியஸ் ஆன சுட்டி பையன்'...அனல் தெறிக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 06, 2019 01:08 PM

தெலங்கானாவில் இளம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று அதிகாலை காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார்கள்.

Priyanka Reddy Case: Kid Says He Will Thrash Rape Convicts in Video

இந்நிலையில் இதுபோன்ற குற்றவாளிகளை சும்மா விட கூடாது என சிறுவன் 'அஜய் கார்த்திக்' பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த குட்டி தம்பியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு, பிறந்து 15 நாட்களே ஆன தனது தம்பி தன்னை அடித்து விட்டதாக கூறி, அப்பாவிடம் அழுத வீடியோ செம வைரலானது. அதன் மூலம் பலரது மனதை கவர்ந்தவர் தான் அஜய் கார்த்திக்.

அவர் தற்போது பெண் மருத்துவர் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து பேசியுள்ள வீடியோ பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், சிறுவர்கள் வரை போய் சேர்ந்துள்ளதையும் அது அவர்களது மனதை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதையும் இந்த வீடியோ விளக்குகிறது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் நேற்று இரவு சிறுவன் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து பேசியதாகவும், இன்று காலை அந்த குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சிறுவன் அஜய்யிடம் அவரது தந்தை, ''இந்தியாவுல இப்போ பேட் பாய்ஸ் எல்லாம் அதிகமாயிட்டாங்க என கூறுகிறார். அதற்கு சிறுவன் நான் அவங்கள எல்லாம் அடிச்சு தூக்கி போடுறேன் என கூறுகிறார். ஆனால் நீ பண்ண கூடாது, இங்க சட்டம் எல்லாம் இருக்கு ஆனா அது சரி இல்ல அப்படின்னு அவரது தந்தை கூறுகிறார். உடனே சட்டம் இல்லையா என கேக்கும் சிறுவன், அப்போ நான்  பெரியவன் ஆகி எல்லாரையும் பாத்துக்குறேன்'' என கூறுவது போல வீடியோ முடிகிறது.

Tags : #RAPE #SEXUALABUSE #ENCOUNTER #POLICE #PRIYANKA REDDY CASE #KID