‘ஸ்பெஷல் கிளாஸ் சென்ற’... ‘5-ம் வகுப்பு மாணவிக்கு’... ‘பள்ளியில் நேர்ந்த சோகம்’... ‘அதிர்ச்சியடைந்த பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 25, 2019 01:09 PM

சிறப்பு வகுப்புக்கு சென்ற 5-ம் வகுப்பு மாணவிக்கு, 60 வயதுள்ள பள்ளியின் தாளாளர் (Correspondent) பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 year old girl sexually abused by school correspondent

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராயக்கோட்டை சாலையில், தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நடைபெறும், கையெழுத்து பயிற்சி (hand writing practice) தொடர்பான சிறப்பு வகுப்பிற்கு, மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் வந்து செல்வது வழக்கம். அதுபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்தப் பள்ளியில் நடைப்பெற்ற கையெழுத்து பயிற்சி சிறப்பு வகுப்பிற்கு, மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வரும், 5-ம் வகுப்பு மாணவியான, 10 வயது மகளை, அவரது தந்தை கொண்டுவந்து வகுப்பில் அமரவைத்துள்ளார்.

பின்னர் அவர், அதேப்பள்ளியில் நடந்த ஜோதிடம் தொடர்பான வகுப்புக்கு சென்றுள்ளார். இதில் பங்கேற்ற 5-ம் வகுப்பு மாணவி, 60 வயதான தாளாளர் குருதத்திடம் சென்று, கையொப்பம் பெற அவரது அறைக்குள் சென்றுள்ளார். அப்போது, பள்ளி தாளாளர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, சக மாணவ, மாணவிகள் மற்றும், மாணவியின் தந்தை உள்ளிட்டோர் ஓடி வந்தனர். தனது தந்தையிடம் நடந்தவற்றை 5-ம் வகுப்பு மாணவி, அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, பள்ளி தாளாளரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது, மாணவியின் தந்தையிடம் தன்னை மன்னித்து விடுமாறு தாளாளர் கூறியதாக தெரிகிறது. எனினும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள், அங்கிருந்து தாளாளர் தப்பிசென்றுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவுசெய்து,  தலைமறைவாக உள்ள பள்ளி தாளாளர் குருதத்தை தீவிரமாக தேடி வந்தநிலையில் அவர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

Tags : #ABUSE #STUDENT #GIRL #CORRESPONDENT #SCHOOL