'இது தமிழ்நாடு பா' ... 'உள்ள வந்தா உன்ன சாவடிச்சுருவோம்'... கொரோனா வைரசிற்கு எச்சரிக்கை விடுத்த தமிழக 'சட்டமன்ற உறுப்பினர்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் வந்தால் அந்த வைரஸ் உயிரிழந்து விடும் என தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. 130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் கொரோனா வைரஸ் மூலம் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். அனைத்து மாநில அரசுகளும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தமிழக சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை கட்சியை சேர்ந்த தனியரசு இது குறித்து பேசுகையில், 'தமிழக முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர். உலகிலேயே பாதுகாப்பான பகுதியாக தமிழகம் விளங்கி வருகிறது. பல வைரஸ் காய்ச்சல்கள் வந்த போதும் தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரும் குணமடைந்து விட்டார். இனிமேல் இதன் மூலம் யாரவது பாதிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் செத்துப் போய் விடும்' என தெரிவித்துள்ளார்.
