'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 23, 2020 02:51 PM

புதுச்சேரியில் பொதுமக்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை வீட்டிற்குள் இருக்க வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Puducherry CM announces an important update about 144

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரும் 31 ஆம் தேதி வரை புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து புதுச்சேரி முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு தடை உத்தரவு அமல் பிறப்பிக்கப்படவுள்ளது. முன்னதாக மாலை 6 மணி முதல் மதுபானக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள், ஆன்லைன் உணவகங்கள், தொழிற்சாலைகள் முதலியன செயல்படும் தடை விதித்துள்ளோம். அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் வரும் 31 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

Tags : #NARAYANASAMY #PONDICHERRY #CORONA AWARENESS