'கடைசி 24 மணி நேரத்துல யாரும் பாதிக்கப்படல' ... இனி தான் கேர்புல்லா இருக்கணும் ... டெல்லி முதல்வரின் லேட்டஸ்ட் அப்டேட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 24, 2020 04:40 PM

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்படவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

No one in Delhi affected for last 24 hours by Corona

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகிறது. மக்கள் பொதுவெளிகளில் நடமாடாமல் வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடுவதை தவிர்க்கும் அளவிற்கு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று மூலம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நானூறுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'இது குறித்து நாம் இப்போது மகிழ்ச்சியடையக்கூடாது. மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அதனால் அரசுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.

டெல்லியில் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் வரும் 31 ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என டெல்லி அரசு அறிவித்திருந்தது. டெல்லியில் கொரோனா வைரசிற்கு தற்போது 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #ARVIND KEJRIWAL #DELHI #CORONA AWARENESS