‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 30, 2020 04:12 PM

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால், 2 மாதத்திற்கு பிறகு திரும்புவதால், அங்குள்ள மக்கள் தங்களது நினைவலைகளை நினைத்து பார்க்க வைத்துள்ளது.

City at center of China\'s virus outbreak gradually revives

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹானில் கடந்த ஜனவரி மாதம், கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வுஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், வுஹான் நகருக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குக் கொரோனா பரவியது. இதனால் பெரும்பாலான நாடுகள் முழுமையாக லாக்-டவுன் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தொடர் நடவடிக்கைகளால் சீனாவில் கடந்த 19-ம் தேதியில் இருந்து புதிய உள்நாட்டுத் தொற்று எதுவும் ஏற்படவில்லை. இதனால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் பயணத்துக்கான கட்டுப்பாடுகள் கடந்த 25-ம் தேதியில் இருந்து தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் நேற்றில் இருந்து ஹுபெய் மாகாணம் உட்பட அனைத்து மாகாணங்களிலும் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. வுஹான் நகரில் சனிக்கிழமை மெட்ரோ ரயில்கள் சேவை தொடங்கப்பட்டது. எனினும் இந்த நகரத்துக்கு மட்டும் விமான சேவை இயக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் அனைத்து வங்கிகள், ஷாப்பிங் சேவைகளும் அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நகரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், நகரத்திற்கு திரும்ப பலர் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் வுகான் நகரத்திற்கு திரும்பும் பலர் ஏதோ அந்நிய தேசத்தில் அதாவது ஏலியன் நகரத்தில் நுழைவது போல் உள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். கொரோனா பாதித்த கணவரை பிரிந்து இருந்துவிட்டு தற்போது அவரை பார்ப்பதற்காக, மகளுடன் வுகான் நகரத்திற்கு தாய் ஒருவர் திரும்பியபோது, ரயில் ஓட்டுநர் நாம் எங்கு செல்கிறோம் என்பதை அறிந்து வேகமாக ஓட்டுவதாக தனது மகள் கூறியதைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் 36 வயதான தாய். எனினும் 65 வயதான முதியவர்களுக்கு அங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகின்றன. பொதுவெளியில் யாரும் அவசியமன்றி வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS #CORONA #CHINA #WUHAN