'லாக்டவுனை' மீறி சுற்றித்திரிந்த 'இளைஞர்கள்..'. 'கேள்விகேட்ட' போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 'துப்பாக்கியால்' சுட்டுப்பிடித்த 'இன்ஸ்பெக்டர்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 27, 2020 04:49 PM

பெங்களூருவில் லாக் டவுனை மீறியது மட்டுமல்லாமல் போலீசார் மீதும் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

police opened fire for assaulting them during lockdown

நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீறி வெளியே வருபவர்களை போலீசார் லத்தியால் அடித்தும் விநோதமான தண்டனைகளை வழங்கியும் விரட்டியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று காலை இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துள்ளனர். அப்போது சஞ்சய் நகர் அடுத்த பூபசந்திராவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில் தஜுதின், குதுப்தின் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வந்ததைக் கண்ட போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊரடங்கு உத்தரவின்போது எப்படி வெளியே வரலாம் என போலீசார் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைகளில் உள்ள லத்தியால் தாக்க முற்பட்டனர். அப்போது போலீசாரையே மூவரும் பதிலுக்கு தாக்கியுள்ளனர்.

இதனை அருகில் இருந்தவர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதற்கிடையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்களை கைது செய்ய வலியுறுத்தி அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து தஜுதின், குதுப்தின் மற்றும் அவரது நண்பரை கைது செய்ய முயன்றனர். அப்போது தஜுதின் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரது காலில் சஞ்சய் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி துப்பாக்கியால் சுட்டார். அதில் காயமடைந்த தஜுதினை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONA #LOCKDOWN #BANGALURU #ASSAULTING #POLICE