'மண்சட்டி'யால் அடித்து.. காவலர்களுடன் 'கட்டிப்புரண்டு' சண்டைபோட்ட நபர்-வீடியோ உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 15, 2019 03:01 PM

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகில் எங்கு என்ன நடந்தாலும் நமது உள்ளங்கையில் வைத்திருக்கும் மொபைலால் அதனைக் காண முடிகிறது. இதனால் செய்தி சேனல்களை விடவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பார்ப்பதை இளைய தலைமுறையினரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர். மனதை நெகிழ வைக்கும் வீடியோக்களை விட அடித்துக்கொள்ளும் வீடியோக்கள் இணையத்தில் ஹிட்டடிக்கின்றன.

Man fighting with Traffic Police in road, Video here!

இதனால் எங்கு என்ன சண்டை நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை சமாதானம் செய்யாமல், வேடிக்கை பார்ப்பது போல வீடியோவில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர். இதில் சில வீடியோக்கள் தெறி ஹிட்டடிப்பதும் உண்டு. அந்த வகையில் இரண்டு போக்குவரத்து காவலர்களை ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

 

அதில் இரண்டு போக்குவரத்து காவலர்களையும் மாறி,மாறி ஒருவர் தாக்குகிறார். இதில் உச்சகட்டமாக அருகில் இருக்கும் மண்பாண்ட சட்டிகளை எடுத்து ஒரு காவலரின் தலையில் அடிக்கிறார்.இதனால் அவரின் தலையில் ரத்தம் வருகிறது. தொடர்ந்து மற்றொரு காவலரையும் ரோட்டில் போட்டு புரட்டி எடுக்கிறார்.என்ன காரணம் என்று தெரியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்டவர் ஹெல்மெட் அணியாமல் வந்தது காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.