‘கொடிகளை அகற்றிய இன்ஜினியர் மீது சரமாரித் தாக்குதல்’.. ‘மதிமுக தொண்டர்களால்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 18, 2019 04:49 PM

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்சிக் கொடிகளை அகற்றிய மாநகராட்சி செயற்பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Engineer thrashed by MDMK workers for removing flags

பள்ளிக்கரணையில் பேனரால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து திருமண நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் வரை மதிமுக கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் அடையாறு செயற்பொறியாளர் வரதராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த மதிமுக கொடிகளை அகற்றியுள்ளனர். 

அப்போது அங்கு வந்த மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்ரமணி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பொறியாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி தான் அகற்றுகிறோம் என அவர்கள் கூற அதில் ஆத்திரமடைந்த சுப்ரமணி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வரதராஜனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார் சுப்ரமணி மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

Tags : #CHENNAI #MDMK #MEETING #BANNER #SUBASHRI #ENGINEER #VIDEO #ATTACK