'நான் குடும்ப அரசியல் நடத்துல'..'என் குடும்பத்துல ஒரு உயிர் போச்சு'... மனமுருகிய வைகோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 15, 2019 11:07 PM
யஷ்வந்த் சின்ஹா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, ம.தி.மு.க.வின் சார்பில் நடந்த அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் மாநாட்டில் வைகோவிற்கு அளிக்கப்பட்ட போர்வாளும், வைகோவின் போர்ச் சொல்லும்தான் ஹைலைட் ஆகியுள்ளன.

இதில் பேசிய வைகோ, டெல்லி ஜந்தர்மந்தரில் 5000 பேருடன் ஈழத்தமிழருக்காக கை உடைந்த நிலையிலும் யஷ்வந்த் சின்ஹா தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பற்றி பேசியவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குடும்ப அரசியல், என பலவற்றையும் பற்றி படு சுவாரஸ்யமாகவும் சூடாகவும் பேசினார்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நச்சாலையாக உள்ளது பற்றியும், சமூக நீதி உள்ளிட்டவை பற்றியும் பேசிய வைகோ தான் குடும்ப அரசியல் எதுவும் நடத்தவில்லை என்றும், தன் குடும்பத்தினர் யாரும் பதவியில் இல்லை என்றும், சொல்லப்போனால் தன் குடும்பத்தில் ஒரு உயிரையே இழந்துவிட்டதாகவும் உருக்கமாக பேசினார்.
