'சென்னை மக்களே'...'புறநகர் ரயிலில் வரப்போகும் அதிரடி வசதிகள்'... செம குஷியில் பயணிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 15, 2019 04:31 PM

சென்னை புறநகர் ரயிலில், குளிர் சாதன வசதி உட்பட பல்வேறு வசதிகள் செய்ய இருப்பதாக தென்னக ரயில்வேயின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Southern Railway says Chennai Suburban Train get new facilities

அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்துவது சென்னை புறநகர் ரயில் சேவையை தான். இது சென்னை மக்களின் பயணத்திற்கு உயிர் நாடியாகவே திகழ்கிறது என கூறலாம். இருப்பினும் இந்த சேவையில் சில சிக்கல்களும், பிரச்சனைகளும் இருப்பதாக பயணிகள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.

இதனிடையே புறநகர் ரயிலில் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதால் விபத்திலும் சிக்குவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் புறநகர் ரயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது  தென்னக ரயில்வே சார்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜரானார்.

அப்போது அவர், 'சென்னை புறநகர் ரயிலில் குளிர் சாதன வசதி, தான் இயங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது தினமும் புறநகர் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags : #TRAIN #SOUTHERN RAILWAY #CHENNAI SUBURBAN TRAIN