ஒரு ‘விபத்தில்’ தப்பியவர்களுக்கு... ‘அடுத்து’ காத்திருந்த ‘பயங்கரம்’... கண் இமைக்கும் நேரத்தில் நடந்த முடிந்த ‘கோரம்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 20, 2020 09:55 AM

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Ulundurpettai 4 Died In Private Bus Government Bus Accident

அரக்கோணத்தைச் சேர்ந்த ஐசக் என்பவர் தூத்துக்குடி சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே போய்க்கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஒன்று அவருடைய காரின் பின்புறம் மோதியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிச் சென்ற ஐசக் அரசுப் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, பேருந்தில் இருந்த பயணிகளும் கீழே இறங்கி அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது சென்னை நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின்மீது மோதியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் ஐசக் மற்றும் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் சாலையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் சாலையிலேயே கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT #ULUNDURPETTAI #KALLAKURICHI #PRIVATEBUS #GOVERNMENTBUS