'500 பேரின் பணம் அம்பேல்!'.. 'ஆன்லைன் கேம் மூலம் நூதன மாற்றம்'.. சென்னையில் சிக்கிய கால் செண்டர் ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 18, 2019 12:36 PM

சென்னை சிட்லபாக்கத்தில் ஃபீனிக்ஸ் கால் செண்டர் என்கிற பெயரில் போலி கால் செண்டர் நடத்தி, வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை வைத்து அவர்களின் வங்கிகளில் இருந்த பணத்தை கொள்ளையடித்ததாக 12 பேர் கொண்ட கும்பல் கைது செய்துள்ளனர். ‘

chennai call center staffs arrested for money laundering

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒருநாள் இவ்வாறு சிக்கிக் கொண்டால், அந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்த அந்த கும்பலைச் சேர்ந்த மணிகண்டன் இதேபோன்று பெங்களூரில் செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்திடம் கற்றுக்கொண்ட வித்தையை சென்னையில் பரிசோதனை செய்து பார்த்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது, மக்களிடம் இருந்து ஏமாற்றி திருடிய பணத்தை ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி இழந்து, அதே சமயம் எதிர்முனையில் ஆடியவர்களும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்களே என்பதால், பணத்தை ஆன்லைன் விளையாட்டினில் இழந்ததாகச் சொல்லி பத்திரப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனை.

ஆனால் சென்னை போலீஸ், தமக்கே உரிய விசாரணை முறையினாலும், சைபர் பிரிவு உதவியுடனும் இந்த கும்பலின் திட்டத்தை கையும் களவுமாக கண்டுபிடித்துவிட்டனர்.

Tags : #FRAUDSTERS #COMPANY #POLICE