‘அசுரவேகத்தில்’ திரும்பிய பேருந்து.. தூக்கி வீசப்பட்ட மாணவி..! பொங்கல் லீவ்வுக்கு வீட்டுக்கு செல்லும்போது நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 15, 2020 10:23 PM

ஓசூர் அருகே அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

School girl thrown from government bus and dies in Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் அக்‌ஷயா (12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பொங்கல் பண்டிகைக்காக அரசு பேருந்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது பேருந்து அதிவேகத்துடன் வளைவில் திரும்பியுள்ளது. அந்த சமயம் பேருந்துக்குள் இருந்த மாணவி அக்‌ஷயா மற்றும் வீரேஷ்  என்ற பயணி வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வீரேஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #SCHOOLSTUDENT #HOSUR