மெலிஞ்சிட்டே போற 'ஒழுங்கா' சாப்டு... திட்டி 'அட்வைஸ்' செய்த பெற்றோர்... விஷம் குடித்து புதுப்பெண் தற்கொலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Jan 17, 2020 12:22 AM

ஒழுங்காக சாப்பிடுமாறு பெற்றோர் மற்றும் கணவன் வீட்டார் அறிவுரை கூறியதால், புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newly Married woman died near Tiruvarur, police investigate

திருவாரூர் மாவட்டம் நீலாங்கரை பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி(18) அதே ஊரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் சிவரஞ்சனி ஒழுங்காக சாப்பிடவில்லை என்று இருவீட்டாரும் திட்டி அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்து போன சிவரஞ்சனி விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அவரது வீட்டினர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.