“ஸ்னாப்சாட்டில் படங்கள், வீடியோக்கள் அனுப்பி.. சக ஆசிரியையுடன் சேர்ந்து பள்ளி மாணவனை பலாத்காரம் செய்த ஆசிரியை!”
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர், தன்னுடைய தோழியுடன் சேர்ந்து பள்ளி மாணவரை வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வரும் ஆசிரியை ஜாய்ஸ் சர்ச்வெல் (Joyce Churchwell), முன்னதாக அதே பள்ளியில் வேலை பார்த்த இன்னொரு ஆசிரியையுடன் இணைந்து மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக்கொண்டதாக செய்திகள் பரவியிருந்தன.
இந்த நிலையில்தான், 40 வயதான ஆசிரியை ஜாய்ஸ் சர்ச்வெல், தனது தோழியும் ஏற்கனவே பள்ளியில் வேலை பார்த்த முன்னாள் ஆசிரியையுமான இன்னொரு பெண்மணியுடன் இணைந்து பள்ளி மாணவர் ஒருவருடன் ஸ்னாப் சாட்டில் ஆபாசமாக உரையாடியுள்ளார்.
இதே போல் தங்களது நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் மாணவனுக்கு அனுப்பியதோடு, ஆசிரியை ஜாய்ஸ் தனது கணவர் வெளியே சென்ற நேரமாகப் பார்த்து மாணவனை வீட்டுக்கு வரவழைத்து, தனது தோழியுடன் சேர்ந்து மாணவனை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியைகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாகவும், ஆசிரியைகள் விசாரிக்கப்படுவதில் போலீஸாருக்கு ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
