“20,000 ஃபோட்டோஸ்.. 600 வீடியோஸ்!”.. “போதை மருந்து கொடுத்து பலாத்காரம்!”.. மிரளவைக்கும் “பாலியல் பிரிடேட்டர்!”

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jan 20, 2020 10:56 AM

மேற்கு லண்டனில் உள்ள சேர்ந்த 32 வயதான ஜாமி ரோஜர்ஸ் (Jamie Rogers) என்பவர் போதை மருந்தைக் கொடுத்து 7 பெண்களை ஒரே ஒரவில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

man sexually assaults women, took 20,000 photos 600 videos

திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில், பில்டர் தொழில் செய்து வந்த ரோஜர்ஸ், இதற்காக தேர்வு செய்யும் பெண்களை நட்பு வட்டத்தில் இருப்பதால், தம் வீட்டுக்கு பார்ட்டி என்கிற பெயரில் வரவழைத்துள்ளார். சில பெண்கள் தத்தம் கணவருனும் வந்திருக்கின்றனர். ஆனால் அனைவருக்கும், உணர்வுகளைத் தூண்டும் குறிப்பிட்ட வகையான போதை மருந்தினை குளிர்பானத்திலும் மதுவிலும் கலந்துகொடுத்துள்ளார்.

அதன் பின்னர் போதை மருந்தால் மயக்கமடைந்து இருந்த பெண்களை பாலியல் பலவந்தத்துக்கு உள்ளாக்கிய ரோஜர்ஸ் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவுக்குத் திரும்பிய பின்னரே இதனை அறிந்துள்ளனர்.  பின்னர் அவர்கள் போலீஸாருக்கு அளித்த தகவலை அடுத்து, விரைந்து வந்த போலீஸார் விசாரித்ததில், இதுவரை 100க்கும் மேற்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள ரோஜர்ஸ், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களின் 20 ஆயிரம் புகைப்படங்களையும், 600 வீடியோக்களையும் படம் பிடித்து  தனது செல்போனில் பாதுகாத்து வைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

8 வருடங்களில் 12 பலாத்காரங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பாலியல் தாக்குதல் குற்றங்களைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட ரோஜர்ஸ் பற்றி 2 வருடங்களுக்கு முன்பே புகார்கள் வந்தும், இவர் கைது செய்யப்பட்டு சிறைக் காவலில் வைக்கப்படாதிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், ரோஜர்ஸை 44 வழக்குகளில் குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 21 வருடங்கள் சிறை தண்டனையும், அதற்கு முன்னால் 2 வருடம் சிறைக்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவரை பாலியல் பிரிடேட்டர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

Tags : #JAMIE ROGERS