‘அந்த இருமல் சத்தம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது சார்...’ ‘எனக்கு ஒண்ணும் இல்ல, ஆனா அத கேக்குறப்போ...’ காலர் ட்யூனை தடை செய்ய வழக்கு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 11, 2020 09:22 PM

கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு மூலம் அனைத்து மொபைல் நெட்ஒர்க்கிலும் ஆங்கிலத்தில் வரும் காலர் ட்யூனை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Case for banning coughing noise when called on cell phone

உலகம் மக்கள் அனைவரையும் பீதி அடைய செய்துள்ளது கொரோனா வைரஸ். இன்று வரை இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க படவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுக்குள் கொண்டு வர  அனைத்து நாடுகளும் பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.

இந்தியாவிலும்  பல்வேறு முறைகளில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகளையும், தற்காத்துக்கொள்ளும் அறிவுரைகளையும் பரப்பி வருகிறது. மத்திய அரசு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக மொபைல் போனில் ஒருவரை அழைக்கும் போது, இருமலுடன் தொடங்கும் இந்த விழிப்புணர்வு விளம்பரத்திற்கு பெரும்பாலான மக்களளை எரிச்சலடைய செய்துள்ளது. ஒரு சிலர் இந்த விளம்பரத்தை பாராட்டியும் வருகின்றனர்.

மேலும் இந்த விழிப்புணர்வு விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் இருமலுடன் தொடங்கும் இந்த விளம்பரம் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்று நினைக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து வாட்ஸ் அப், குறுஞ்செய்தி, ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் வழியே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.

வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் தொடர்ந்த இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர  உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONOVIRUS