‘ஐ.பி.எல் கண்டிப்பா நடக்கும்...’ ஆனால், ‘அதுக்கெல்லாம்’ அங்க பெர்மிஷன் கெடையாது...! ஐ.பி.எல் தொடர்பான வதந்திகள் குறித்து புதிய தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Mar 10, 2020 05:08 PM

சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கும் சூழலில் கொரொனோ வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கூடும் என்னும் வதந்திகள் பரவி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

New information on IPL cricket rumor by Corona virus

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பதட்டமடைய செய்து வருகிறது, மேலும் இவ்வைரசிலிருந்து தப்பித்த நாடு ஏதும் இல்லை என்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரசை காட்டிலும் மிக அதிக வீரியத்தை கொண்டுள்ளது என பல மருத்துவ அறிஞர்கள் கூறி வரும் சூழலில் இன்றளவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கொரொனோ வைரஸ் காரணமாக பல நாடுகளில் விளையாட்டு போட்டிகளும் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்று வருகின்றன. சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் 45 பேர் கொரொனோ வைரசால் பாதிப்படைந்துள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிபோகுமா இல்லை, தடை செய்யப்படுமா என்று ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நிருபிக்கும் வகையில் சமுகவளைதளங்களில் சிலர் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது எனவும், இல்லையென்றால் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டி நடத்தப்படலாம் என வதந்திகளை பரவி வருகிறது.

அதற்கு பதிலளிக்கும் வகையில் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் ஏடிகே-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டத்தில் ரசிகர்களின் வருகையை யாராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கிட்டதட்ட 60 ஆயிரம் ரசிகர்கள் மைதானம் வந்து போட்டியை ரசித்தனர். எனவே இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வது போன்றவற்றிற்கு தடைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் பரவி வரும் கொரொனோ வைரசை கட்டுப்படுத்த கண் மற்றும் வாய் பகுதிக்கு கைகளை கொண்டு செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும், அடிக்கடி கைக்கழுவுமாறும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறித்திவருகின்றனர்  மேலும் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக இருப்பதை தவிக்க வேண்டும் என்று சுகாதார துறை மக்களுக்கு அறிவுறித்தி வருகிறது. கூட்டம் மிகுந்த பகுதிகளில் இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONOVIRUS