பணத்துக்கே ‘திமிரு’ காட்டிய கொரோனா வைரஸ்...! ‘கரன்சியையும் விட்டு வைக்காத கொடூரம்...’அதிக வெப்பத்தில் எரிக்க உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பீதியால் தற்போது ரூபாய் நோட்டுகளை கொளுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உலக பொருளாதாரத்தை உலுக்கும் வைரஸ் பீதியில் உலக நாடுகள் உள்ளது.

சீனாவில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் தன்னுடைய பசிக்கு இதுவரை 2000 மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ளது. 72,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரசை முதலில் கண்டுபிடித்து எச்சரித்த டாக்டர். லி வென்லியாங் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதுமட்டுமில்லாமல், வுகானின் வுச்சங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் கொரோனா வைரசால்நேற்று காலமானார்.
கொரோனா வைரசால் சீன மக்கள் வெளியில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பொது மக்களுக்கு அரசே உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ரோபோக்களின் உதவியோடு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் தன் குடும்பங்களை பிரிந்து மக்களுக்கு இரவும், பகலும் சேவை செய்து வருகின்றனர். வைரஸை தடுக்கும் வகையில் மக்கள் சீனாவிற்கு செல்லவும், சீன மக்கள் தங்கள் நாட்டிலிருந்து வெளியே பயணம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.
கொரோனா வைரஸ் காற்றின் மூலமும், பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகவும் பரவுகிறது. இதனால் ரூபாய் நோட்டுகளின் மூலமும் பரவும் அபாயம் இருப்பதால் மக்களுக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை கட்டுக்குள் கொண்டு வர ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை, ஷாப்பிங் மால்கள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான கரன்சி நோட்டுகளை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சுடன் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
