'வாவ்... செம ஐடியா...!' 'கொரோனாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகணுமா...?' அப்படின்னா 'இதுதான்' ஒரே வழி... வைரலாகும் அல்டிமேட் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 05, 2020 02:49 PM

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க மஹிந்திரா குரூப் நிறுவனத்தின் சேர்மன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Viral video of the idea to escape the corona virus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா உட்பட 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவை சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட வேலைகளை கூட சரியாக செய்யமுடியாமல் அவதிப்படுவருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸில் இருந்து தப்பிப்பது எப்படி என தான் டிவிட்டரில் கேட்டிருந்ததாகவும், பலரும் பல்வேறு ஐடியாக்களை கூறியிருந்தாலும், இதுதான் தன்னை கவர்ந்த சூப்பர் ஐடியா என மஹிந்திரா குரூப் நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மகேந்திரா ட்விட் செய்துள்ளார்.

அந்த வீடியோவில், தனக்கு என்ன வேண்டும் என ஒரு சீட்டில் எழுதி, அதற்கான பணத்துடன் உரிமையாளர் ஒருவர் நாயிடம் கொடுக்க, அந்த நாய், பொம்மை காரை ஒட்டிக்கொண்டு கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வருகிறது. இப்படி செய்வதால், நாம் வெளியே செல்ல தேவை இல்லை. இதனால் கொரோனா வைரஸ் நம்மை பாதிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : #CORONOVIRUS