எப்படிடா 'இது' அங்க இருந்து சென்னைக்கு வந்துச்சு...! ‘ப்ளீஸ் எப்படியாச்சும் திருப்பி அனுப்பிடுங்க...’ 'அதுக்கு கொரோனா வைரஸ் இருக்கா..? இல்லையா...?' அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 17, 2020 08:52 AM

சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலில் பூனை இருப்பதை அறிந்த சுங்க துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

one cat arrived in chennai fort from china ship

கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது . இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான உயிரை பலிவாங்கிய கொரோனா விலங்குகளிருந்தே முதலில் மனிதர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது. மேலும் இது காற்றின் மூலமும் வெகுவிரைவாக பரவும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கடந்த 11-ஆம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்‌ட சுற்றறிக்கையில், சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.

இந்த சூழலில் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழனன்று துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டெய்னரில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை  கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பூனைக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும் அந்த பூனையை யார் அனுப்பியது, யாருக்காக அனுப்பப்பபட்டது என்பதை பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அச்சம் அடைவதால் அந்த கண்டெய்னரில் வந்த அனைத்து பொருளையும் திருப்பி சீனாவிற்கே அனுப்பும் பணிகள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONOVIRUS