'கொரோனா' வைரஸ் தாக்கப்பட்ட சீன நபர் சென்னையில்...? 'மலேசியா வழியாக வந்ததாகவும்...' தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வந்த சீன சுற்றுலா பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளிடம், மத்திய சுகாதாரத்துறையினா் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சீனாவைச் சோ்ந்த லுவிஜின் என்பவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி வைத்து, பலத்த பாதுகாப்புடன், சிறப்பு தனி ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, சீன தூதரகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர், சீனாவில் இருந்து ஹாங்காங் சென்று, அங்கிருந்து சுற்றுலா பயணியாக மலேசியா வழியாக சென்னை வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
