சீனாவிலிருந்து வந்த தமிழக பரோட்டா மாஸ்டருக்கு கொரோனா...? 'டெஸ்டுக்காக புனே அனுப்பி வச்சிருக்கோம்...' தீவிர கண்காணிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 04, 2020 11:13 AM

சீனாவில் இருந்து நீடாமங்கலத்துக்கு வந்துள்ள பரோட்டா மாஸ்டர் ஒருவர் உடல் நலக் குறைவால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு வார்டில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

Corona virus infected with Barota Master from Tamil Nadu

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலிருந்து சீனா சென்றவர்கள் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சீனாவில் உள்ள உணவகத்தில் பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்த ஒருவர் ஜனவரி 31 - ம் தேதி தமிழகம் வந்துள்ளார். நேற்று முந்தினம் இரவு அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற அவர் சீனாவிலிருந்து வந்தவர் என்று தெரிய வந்ததால் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர் சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமார் பேசிய போது “ சீனாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய அவர் பிரத்யேக வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ரத்த பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு உடல் நிலை சீராக உள்ளது. இன்னும் 30 நாட்களுக்குக் கூடுதல் கண்கானிப்பில் இருப்பார் “ என்று கூறினார்.

Tags : #CORONOVIRUS #THIRUVARUR