குண்டூர் மிளகாய்க்கே கொடுத்த 'காரமான' நியூஸ்..! 'கொரோனா' வைரஸ்னா சும்மாவா...! தேஜாவுக்கும் சேர்த்து வைத்த ஆப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக குண்டூர் மிளகாய்க்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மிளகாய் மார்க்கெட் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருக்கிறது. இங்கு விளைவிக்கப்படும் புகழ்பெற்ற குண்டூர், தேஜா வகை மிளகாய்களின் விலை 50 சதவீத அளவிற்கு தடாலடியாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீனாவில் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதே ஆகும். ஏனெனில் இந்திய மிளகாய்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது.
தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கிய உடனேயே, வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதி பொருட்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. இது ஆந்திரா மற்றும் தெலங்கானா விவசாயிகளை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக மிளகாய் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.5,000 முதல் ரூ.7,000 அளவிற்கு விலை சரிந்துள்ளது.
இவற்றை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் மிளகாய்களை குறைந்த அளவில் மட்டும் வாங்குமாறு குண்டூர் விவசாய சந்தையில் இருக்கும் வியாபாரிகளுக்கு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து நேரடியாகவும், வங்கதேசம் மூலமாகவும் சீனாவிற்கு மிளகாய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் வங்கதேசம் மூலம் செய்யப்படும் ஏற்றுமதியை இந்திய வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். இவ்வாறு செய்வதால் எளிதான வியாபார நடைமுறைகளுடன், குறைந்த வரி மட்டுமே செலுத்தி மிளகாய்களை விற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது.
