'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 10, 2020 03:39 PM

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் நர்ஸ்களுக்குப் பதிலாக ரோபோக்கள் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

Robots have replaced nurses in hospitals in china

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 910 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும் சமீபத்திய தகவலில் தெரிகிறது. இந்நிலையில், பல மருத்துவமனைகளில் மேலும் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க சீன அரசு வுஹான் நகரில் 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 10 நாட்களில் கட்டி முடித்திருக்கிறது.

இதேபோல இன்னும் விரைவாக பல மருத்துவமனைகளை அமைக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற ஊழியர்களும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து பணியிலேயே மூழ்கியுள்ளனர். அவர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர்.

எனவே, மருத்துவமனைகளில் நர்சுகள் செய்யும் சில வேலைகளை கவனித்துக்கொள்ள ரோபோக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவுகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Tags : #CORONOVIRUS #ROBOT