'டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 2 பேர் உயிரிழப்பு...' '6 தமிழர்கள் உட்பட 138 இந்தியர்கள்...' 624 பயணிகளுக்கு கொரோனா வைரஸ்... !

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 20, 2020 11:01 AM

ஜப்பானிய அரசால் தனிமைப்படுத்தப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கிய 2 பயணிகள் உயிரிழந்த சம்பவம் கப்பலில் உள்ள சக பயணிகளை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

2 passenger died in Diamond Princess cruise ship

சுமார் 3,711 பயணிகளுடன் ஹாங்காங்கில் இருந்து  ஜப்பான் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் சில பயணிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கப்பலில் இருக்கும் பயணிகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் ஜப்பானிய அரசு சொகுசு கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர தடைவிதித்தது. ஜப்பான் அரசின் சார்பாக ஒரு மருத்துவ குழு கப்பலுக்கு சென்று ஆய்வு நடத்தி 8 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக ஜப்பானில் கொரோனா பரவாமல் இருக்க துறைமுகத்திலிருந்து பல மைல் தூரத்திற்கு அப்பால் நடுக்கடலில் கப்பல் நிற்கும் என ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. 6 தமிழர்கள் உள்பட 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் அக்கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் வைரஸ் தாக்கியுள்ள இருவர் உயிரிழந்த சம்பவம் கப்பலில் இருக்கும் சக பயணிகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கிருக்கும் பயணிகளுக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் செய்து வந்த நிலையிலும் இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கிருக்கும் பயணிகளை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

ஜப்பானிய அரசால் தனிமைப்படுத்தப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கிய 2 பயணிகள் உயிரிழந்த சம்பவம் கப்பலில் உள்ள சக பயணிகளை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

சுமார் 3,711 பயணிகளுடன் ஹாங்காங்கில் இருந்து  ஜப்பான் சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் சில பயணிகளுக்கு தீடிரென காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கப்பலில் இருக்கும் பயணிகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் முதலில் ஜப்பானிய அரசு சொகுசு கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர தடைவிதித்தது. ஜப்பான் அரசின் சார்பாக ஒரு மருத்துவ குழு கப்பலுக்கு சென்று ஆய்வு நடத்தி 8 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக ஜப்பானில் கொரோனா பரவாமல் இருக்க துறைமுகத்திலிருந்து பல மைல் தூரத்திற்கு அப்பால் நடுக்கடலில் கப்பல் நிற்கும் என ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. 6 தமிழர்கள் உள்பட 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் அக்கப்பலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் வைரஸ் தாக்கியுள்ள இருவர் உயிரிழந்ததாக ஜப்பானிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை மேலும் அவர்கள் 80 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவர்களை பற்றிய விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலில் இருக்கும் பயணிகளுக்கு பல்வேறு மருத்துவ உதவிகள் செய்து வந்த நிலையிலும் இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கிருக்கும் பயணிகளை அச்சத்திலும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியுள்ளது. மேலும் கப்பலில் மொத்தம் 624 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

Tags : #CORONOVIRUS