'அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்...!' 'கொரோனா வைரஸ்லாம் கிட்டக்கூட நெருங்க முடியாது...' இப்போ உள்ள பசங்களுக்கு 'இதோட' அருமை தெரியல...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வைரஸ் தாக்காமல் இருக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும் என்று ஹோட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 8,100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சீனாவில் இருந்து திருவண்ணாமலை திரும்பிய பொறியாளர் ஒருவர், அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச சுகாதார அவசர நிலையாக கொரோனா வைரஸ் பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அதுபற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.இந்த நிலையில், காரைக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலான பிரெசிடெண்ட், “கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடுங்கள்” என்று போர்டு வைத்துள்ளனர்
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் பேசும்போது, “எங்களது ஹோட்டல் 65 ஆண்டுகாலம் பாரம்பரியம் உடையது. சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாகும். சின்ன வெங்காயம் மற்றும் நல்லண்ணெய் ஆகியவை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
ஆனால், தற்போதைய தலைமுறையினருக்கு சின்ன வெங்காயத்தின் அருமை தெரியவில்லை. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி ஒரு போர்டு வைத்தோம். சின்ன வெங்காயம் அதிகம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால், எந்த வைரஸும் தாக்காது” என்று கூறினார்.
