'அந்த' விஷயத்துல நீ 'சரி' கெடையாதுன்னு... என் மொகத்துக்கு 'நேராவே' சொன்னாரு... 'முச்சதம்' அடித்த இளம்வீரரின் வேதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 27, 2020 05:46 PM

கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமான போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்து முடிந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகள் வீரர்கள் பலரையும் போட்டிபோட்டு தங்கள் அணிக்கு எடுத்துள்ளன.

Virat Kohli\'s Honese advice helped me says Sarfaraz Khan

குறிப்பாக இதுவரை கோப்பை வெல்லாத டெல்லி, பெங்களூர், பஞ்சாப் அணிகள் அலசி ஆராய்ந்து ஒவ்வொரு வீரரையும் எடுத்துள்ளன. இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட இளம்வீரர் சர்பராஸ் கான் அது தன்னை வேதனைக்கு உள்ளாக்கியதாக தெரிவித்து  இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், '' பெங்களூர் அணிக்காக ஆடிவந்த என்னை அந்த அணி 2018-ம் ஆண்டு விடுவித்தது. கேப்டன் விராட் கோலி உன்னிடம் திறமைகள் இருக்கிறது. ஆனால் உன்னுடைய உடற்தகுதி அவ்வளவு சிறப்பாக இல்லை என்று என் முகத்துக்கு நேராகவே கூறினார்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர் என்னிடம் நேர்மையாக இருந்தார். என்னுடைய அதீத உணவுப்பழக்கம் காரணமாக என்னுடைய நண்பர்கள் என்னை பாண்டா என்று அழைக்க ஆரம்பித்தனர். படிப்படியாக நொறுக்குத்தீனி, இனிப்புகள் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன். கடுமையாக உடற்பயிற்சிகள் செய்தேன். தற்போது என் நண்பர்கள் என்னை மாச்சோ என்று அழைக்கின்றனர்.

தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறேன். இது சிறப்பான ஒன்றாக உள்ளது. பெங்களூர்அணியில் இருந்து நான் விடுவிக்கப்பட்டது ஒருவிதத்தில் என்னை காயப்படுத்தியது. ஆனால் அதுகுறித்து அதிகம் யோசிக்கவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.

ரஞ்சி போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடிவரும் சர்பராஸ் கான் சமீபத்தில் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம்(301*) விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் ஹிமாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் இன்று 226* ரன்கள் விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.