WATCH VIDEO: நடுரோட்டில் திடீரென.. 'தீப்பற்றி' எரிந்த கார்.. பயணிகள் கடும் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 07, 2019 11:04 PM
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ரோட்டில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈக்காட்டு தாங்கலில் இருந்து ஆலந்தூர் வழியாக வந்த கார் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த இருவர் உயிர் தப்பினர். இதனால் கிண்டி தொடங்கி விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Alandur Metro Station #Chennai pic.twitter.com/j5VkyjvNIt
— Manjari (@mazhil11) November 7, 2019
இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் கார் முக்கால்வாசி எரிந்து விட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : #FIREACCIDENT
