'எரித்துக் கொல்லப்பட்ட பெண் தாசில்தார்'.. பெட்ரோலுடன் பேச்சுவார்த்தைக்கு போன நபர் செய்த பரபரப்பு காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 04, 2019 09:21 PM

தெலங்கானாவின் அப்துல்லாபுர்மெட் மண்டலத்தின் தாசில்தாராகப் பணியாற்றி வந்த விஜயா ரெட்டி என்பவர் தாசில்தார் அறையிலேயே வைத்து தீவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

telangana taluk officer burnt alive by an angry man

அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சொந்தமாக வைத்திருக்கும் 7 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்துக்கொண்டு தாசில்தார் ஆபீஸ்க்கு வந்த சுரேஷ், மதியம் 1 மணிக்கு விஜயாவை சந்தித்து பேசியுள்ளார்.

ஆனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, 1.40 மணி அளவில் தாசில்தாரின் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார் சுரேஷ். இதனால் விஜயா கருகி உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தில் நிலம் சம்மந்தமான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், அங்கு நடக்கும் ஊழல், குளறுபடியோடு இருக்கும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் உண்மைத் தன்மை தூர்வாரப்படுகின்றன.

இந்த நிலையில், சுரேஷின் ஆவணங்கள் குளறுபடியுடன் இருந்ததாகவும், ஆனால் அவற்றை களையச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அதனை பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தும் செய்யாததாலும் ஆத்திரத்தில் சுரேஷ் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாசில்தாரை காப்பாற்றச் சென்றபோது தீவிபத்துக்குள்ளான அவரது டிரைவரும் இன்று மரணம் அடைந்துள்ள செய்தி மேலும் உருக வைத்துள்ளது.

Tags : #FIREACCIDENT #TELANGANA